கை கோர்க்கும் ராமதாஸ், வைகோ, திருமா!
மதுரை: மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறவுள்ள முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து தமிழர் தேசிய இயக்க தலைவரும், முல்லை பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் கூறுகையில்,
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படுவதோடு, தென்னை மற்றும் விவசாய பயிர்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பிழைப்புக்காக வேறு இடத்திற்கு இடம் பெறும் நிலை ஏற்படும்.
தேசிய ஒருமைப்பாட்டை மதிக்கும் வகையில் கேரள அரசின் நடவடிக்கை இல்லை. நமக்கு நியாயமான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது.
அரபிக்கடலில் 2,300 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக கலக்கிறது. அதிலிருந்து 200மில்லியன் கன அடி தண்ணீரை தர கேரள அரசிற்கு மனமில்ைல.
இந்த பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடனேயே தமிழக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும், அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்காவது தொடர்ந்திருக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
எனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் வரும் 31ம் தேதி நடத்த இருக்கிறோம்.
இதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். வைகோ, திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசிகிறார்கள் என்றார்.
திமுகவுடன் கடும் மோதலில் குதித்துள்ள ராமதாஸும், திமுக கூட்டணியில் இருக்கிற திருமாவளவனும், அதிமுக கூட்டணியில் இடம் ெபற்றுள்ள வைகோவுடன் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ள இந்த மாநாடு, அரசியல் வட்டாரத்திலும் புதிய சூழலை உருவாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications