கார் மீது டைவ் அடித்த பஸ்-2 பேர் பலி
காஞ்சீபுரம்:காஞ்சிபுரம் அருகே சென்னையை நோக்கி சென்ற கார் மீது, சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, பல்டி அடித்து விழுந்து நசுக்கியதில், காரில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாதிபர் எஸ்கே.பஜாஜ். இவரது தாயார் ரோஸ்மி தேவி பஜாஜ் (60). இவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து நேற்று மாலை டாக்சி மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ரோஸ்மி தேவி, பஜாஜ், அவரது மனைவி நர்மதா ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சீபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்து. இது இருவழிப் பாதையாகும். மறுவழியில், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.
வந்து கொண்டிருந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அப்படிய தலைகுப்புற பல்டி அடித்து, மறு பாதையில் பஜாஜ் குடும்பத்தினர் பயணித்த கார் மீது கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் பன்னீர் செல்வம் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ரோஸ்மி, பஜாஜ், நர்மதா ஆகியோர் படு காயமைடந்தனர். அதேபோல, பஸ்சில் பயணம் செய்த 19 பயணிகளும் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரோஸ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications