தொட்டபெட்டாவில் பயங்கர தீ: 50 ஏக்கர் காடு காலி
கோவை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வனப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் 50 ஏக்கர் பரப்பிலான வனப் பகுதி தீயில் கருகி விட்டது.
தொட்டபெட்டா வனச் சரகத்திற்கு உட்பட்ட புலி மலை, பள்ளத்தாக்கு மலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது.
வேகமாக பரவிய இந்தத் தீயில் சிக்கி 50 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதி கருகி விட்டது. தீயணைப்புப் படையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கி பல சிறு விலங்குகளும் பலியாகி விட்டன. இருப்பினும் பெரிய அளவிலான விலங்குகள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டன. அதேபோல பெரிய மரங்களும் தீயில் சிக்காமல் தப்பியுள்ளன.
காட்டு எருமை, யானைகள், சாம்பார் மான், புள்ளி மான்கள் ஆகியவை கேரளாவில் உள்ள இந்திரா காந்தி வனவிலங்குகள் சரணாலாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications