கருணாநிதி வெளியே சென்றது ஏன்?
சென்னைமுதல்வர் கருணாநிதி சிறுநீர் கழிக்கச் சென்றது தொடர்பாக சட்டசபையில் இன்று காரசாரமான விவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது முதல்வர் கருணாநிதி எழுந்து வெளியே சென்றார். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முதல்வர் வெளிநடப்பு செய்கிறாரா என்று உட்கார்ந்தபடியே கேட்டனர்.
இதைக் கேட்டதும் அமைச்சர் துரைமுருகன் கோபத்துடன் எழுந்து, முதல்வர் எழுந்து வெளியே செல்லும்போது அதிமுகவினர் உட்கார்ந்து கொண்டு பேசுவது சரியல்ல, கடுமையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள், ஜாக்கிரதை என்றார்.
இதைக் கேட்டதும் கோபமான ஓ.பன்னீர் செல்வம், ஒரு அமைச்சர் ஜாக்கிரதை என்று கடுமையாகப் பேசலாமா என்றார். அதற்கு துரைமுருகன், நீங்கள் பேசிய வார்த்தைகளுக்கு இது மென்மையான வார்த்தைதான் என்றார்.
அப்போது முதல்வர் மீண்டும் உள்ளே வந்தார். உறுப்பினர்களின் வாதத்தைக் கேட்ட அவர் குறுக்கிட்டு, நான் எப்போதும் எதிர்க்கட்சியினரை மதிப்பவன். முன்னாள் அமைச்சர் (ஓ.பன்னீர் செல்வம்) முன்னாள் முதல்வராகவும் இருந்தவர். தற்போது அவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார்.
எல்லோருக்கும் இயற்கை உபாதை உண்டு. நான் வெளிநடப்புச் செய்யவில்லை. வெளியே அனுப்பத்தான் சென்றேன் என்றார். இதைக் கேட்டதும் சபையே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. இதனால் சர்ரென எழுந்த சூடான விவாதம் சட்டென்று அடங்கி சபை அமைதியனது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications