பந்த்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை
இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை எதிர்த்து நாளை தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனறு கோரி சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.
பல்வேறு பொது நலன் தொடர்பாக வழக்கு தொடருபவர் டிராபிக் ராமசாமி. தற்போது பந்த்தை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நலன் வழக்கில்,
அரசியல் கட்சிகளுடன் இணைந்து மாநில அரசு பந்த் போன்ற போராட்டங்களில் ஈடுபட முடியாது. இவ்வாறு போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
இந்தப் போராட்டத்தால் எந்தத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. ரயில், விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது சட்டவிரோதமாகும்.
எனவே இந்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் ராமசாமி.
இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என ராமசாமியின் வழக்கறிஞர் கோரியதால், நீதிபதிகள் முகோபாத்யாயா, தனபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என தலைமை நீதிபதி ஏ.பி.ஷா. உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பெஞ்ச் ராமசாமி மனுவை விசாரித்தது. பின்னர் பந்த் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications