ஓய்ந்தது கும்ப்ளே சூறாவளி
பெங்களூர்:இந்திய சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்தார்.
இந்தியாவுக்காக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர் கும்ப்ளே. உலக அளவில் மிகப் பிரபலமாக உள்ள முரளீதரன், ஷான் வார்னேவுக்குப் பிறகு கும்ப்ளேவின் சுழற்பந்து வீச்சுக்கும் நல்ல மரியாதை உள்ளது.
கடந்த 17 வருடங்களாக உலக ஒரு நாள் கிரிக்கெட் களத்தில் சுழன்றடித்து வந்த சுழற்பந்து சூறாவளி நேற்றுடன் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது.
271 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே 337 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 547 விக்கெட்டுளை சாய்த்துள்ளார் கும்ப்ளே.
![]() |
டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் இந்தியாவிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளேதான்.
பெங்களூரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கும்ப்ளே தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
அவர் பேசுகையில், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட எனக்கு ஆசைதான். ஆனால் எல்லாவற்றுக்குமே முடிவு என்று ஒன்று உண்டு அல்லவா. எனவேதான் ஓய்வு முடிவை எடுத்தேன்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற யோசித்தேன். இருப்பினும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு பலம் சேர்க்க நினைத்தேன். அதனால் ஓய்வை தள்ளிப் போட்டேன்.
எனக்குள் கிரிக்கெட் இன்னும் உள்ளது. எனவே டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.
எனது பந்து வீச்சு அனுபவங்களை, எனது பந்து வீச்சு ஸ்டைலை முழுமையாக, விரிவாக, புத்தமாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
எனது சாதனைகள், மறக்க முடியாத அனுபவங்கள் உள்ளிட்டவற்றை புகைப்படங்களுடன் இப்புத்தகத்தில் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இளம் வீரர்ளுக்கு இது மிகப் பெரும் கருவியாக இருக்கும்.என்றார் கும்ப்ளே.
கும்ப்ளே ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர். பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில்தான் தனது படிப்பை முடித்தார். 1990ம் ஆண்டு ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில்தான் கும்ப்ளே அறிமுகமானார்.
தற்போதைய உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் கும்ப்ளே இடம் பெற்றிருந்தாலும், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் அணியில் சேர்க்கவில்லை. பெர்முடா போட்டியில்தான் கும்ப்ளே சேர்க்கப்பட்டார். அதில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் கும்ப்ளே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications