விஸ்கி அடித்து விழுந்து இறந்தாரா உல்மர்?
லண்டன்:பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர், கழுத்து நெரித்துக் கொல்லப்படவில்லை. அதிக அளவில் விஸ்கி சாப்பிட்டு, நிலை தடுமாறி விழுந்து, கழுத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என புதிய தகவல் கிளம்பியுள்ளது.
உல்மர் மரணம் தொடர்பாக நாளுக்கு நாள் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டார் என முதலில் கூறப்பட்டது. கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு அவர் ஹோட்டல் டவலால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி சந்தித்த அதிர்ச்சித் தோல்வியால் மனம் உடைந்த பாப் உல்மர், விஸ்கி சாப்பிட்டுள்ளார். அதிக அளவில் சாப்பிட்டதால் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் அடிபட்டு மரணமடைந்துள்ளார் என புதிய தகவல் கூறுகிறது.
![]() |
இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி:
பாப் உல்மர் இறந்த அன்று அவர் இருந்த நிலையைப் பார்த்த ஒருவர் கூறியுள்ள தகவல் இது. தான் தங்கியிருந்த ஹோட்டல் பாரில் மிகுந்த சோகத்தோடு தனியாக அமர்ந்திருந்தார் உல்மர். ஜானி வாக்கர் பிளாக் லேபல் விஸ்கியை அளவுக்கு அதிகமாக அவர் குடித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து எழுந்து சென்றார். அதன் பின்னர்தான் அவர் மரணமடைந்தார். எனவே அறைக்குத் திரும்பிய பின்னர் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்க வேண்டும். அப்போது கழுத்து எலும்பில் அடிபட்டு அவர் இறந்திருக்கக் கூடும் என டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இதுதவிர இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதி தோல்வி அடைந்தாதல் உல்மர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியினரிடம் சோகம் ஏதும் இல்லை.
மாறாக அன்று இரவு பாகிஸ்தான் அணியினர் ஜாலியாக, கார் டீலரும், மிகப் பெரிய கோடீஸ்வரருமான தாரிக் மாலிக்கின் வீட்டுக்கு சாப்பாட்டுக்குக் கிளம்பியுள்ளனர். உல்மரை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லையாம். இதுவும் உல்மருக்கு சோகத்தைக் கூட்டியுள்ளது.
இதுகுறித்து தாரிக் மாலிக் கூறுகையில், உல்மர் உள்பட அனைவருமே அன்று இரவு விருந்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் உல்மர் திடீரென இறந்து விட்டதால் அந்த விருந்து ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
மாலிக்கை விசாரிக்க விரும்பிய ஜமைக்கா போலீஸார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் இதுவரை மாலிக் விசாரணைக்கு வராமல் உள்ளனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!













Click it and Unblock the Notifications