பெரியாறு: உரிமை காக்க தவறிய தமிழக அரசுராமதாஸ், வைகோ ஒரே மேடையில் சாடல்!
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையை, நலனைக் காக்க தமிழக அரசு தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிேயார் ஒேர மேடையில் சாடிப் பேசினர்.
பழ. நெடுமாறன் தலைமையிலான வைகை-முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மதுரையில், கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிேயார் கலந்து கொண்டனர். அரசியலில் எதிரெதிர் அணியில் இருப்பதால் இவர்களின் வருகையும், பேச்சும் ெபரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்தது.
கூட்டத்திற்கு வருவதாக கூறப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், என்னமோ நடக்குது, என்னமோ நடக்கப் ேபாகுது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மாநாட்டுக்கு வர வேண்டும் என பழ. ெநடுமாறன் அழைத்தபோது நிச்சயம் வருகிறேன் என்றேன். யார் யார் வருகிறார்கள் என்பது குறித்து நான் அவரிடம் கேட்ககவில்லை. அவரும் சொல்லவில்லை.
ராமதாஸ் முதலில் ஒரு விவசாயி. பிறகு மருத்துவர், அந்தத் தொழிலை நான் இப்போது செய்யவில்லை. அடுத்து சமுதாய தொண்டன். கடைசியாகத்தான் நான் ஒரு அரசியல்வாதி.
இந்த மாநாட்டுக்கு சாதாரண விவசாயிகளின் ேதாழனாகத்தான் வந்துள்ேளன். அரசியலை தூர வைத்து விட்டுத்தான் வந்துள்ளேன்.
ெநடுமாறன் நம்மையெல்லாம் அணி சேர்த்து கொண்டு வந்துள்ளார். அவர் சேர்க்கும் அணி வேறு. அப்படிப்பட்ட விஷயத்தை அவர் செய்ய மாட்டார், அவர் அப்படிப்பட்டவரும் அல்ல. நம்மையெல்லாம் போராட்ட அணிக்குக் ெகாண்டு வந்துள்ளார்.
நெடுமாறன், தமிழர்களுக்காக, தமிழுக்காக குரல் கொடுத்து வரும் மாவீரன். எனவே அந்த ேநாக்கில் மட்டும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும், அரசியல் பூச்சு வேண்டாம்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, ேகரள அரசு அம்மாநில சட்டசபையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது.
சட்டப்பூர்வமாக இந்தப் பிரச்சினைய அணுக முடியாது, ெவற்றி ெபற முடியாது என்பதால், ேகரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமரைப் போய்ப் பார்த்து முறையிட்டார். ஆனால் அப்போதெல்லாம் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் ெகாண்டிருந்தது. இது வேதனையான விஷயம்.
ேகரளாவில் இந்த பிரச்சினையை ஒரே குரலில் பேசுகிறார்கள். ஆனால் இங்குதான் ஒவ்ெவாரு கட்சியும் ஒன்று பேசுகிறது. போனது போகட்டும். இனிமேலாவது அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சினையை நாளையே கூட தீர்க்கலாம். ஆனால் முதல்வர் கருணாநிதிதான் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவர் எடுப்பார் என நம்புவோம்.
விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 60 ஆண்டுகளாக விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து விட்டார்கள். விவசாயிகள் வாழ்வதா, சாவதா என்ற நிலையில் உள்ளனர். அந்த நிலை மாற ேவண்டும். அதற்காக நெடுமாறன் பின்னால் வர நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்றார் ராமதாஸ்.
வைகோ பேசுகையில், எத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசை மிரட்டிப் பணிய வைத்துள்ள முதல்வர் கருணாநிதி, ஏன் விவசாயிகளுக்காக மத்திய அரசை மிரட்டக் கூடாது. எதற்காக அவர் தயங்குகிறார்.
தமிழகத்தின் எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தால் அதை இல்லாமல் செய்ய ஒரு சட்டத்தைக் ெகாண்டு வருகிறது ேகரள அரசு.
நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கூறி பிரதமரை நான்கு முைற சந்தித்துப் பேசுகிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது போதாதென்று புதிய அணை கட்டவும் அனுமதி கேட்டுள்ளார். புதிய அணை கட்ட அனுமதித்தால், நாட்டின் ஒருமைப்பாடு உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழர்கள் நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள். ஆனால் கேரள மக்களுக்கு இதுவரை ஒரு பிரச்சினயையும் கொடுத்ததில்லை. ஆனால் புதிய அணை கட்ட ேகரள அரசு முயற்சித்தால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறி, செங்கல் என ஒன்றும் போக முடியாது. அத்தனையும் நிறுத்தப்படும். அதை அனுமதிக்க மாட்ேடாம்.
இடுக்கி அணை உடையப் போகிறது என்று கூறி மக்களைப் பயமுறுத்த 5 லட்சம் சிடிக்களைத தயாரித்து புழக்கத்தில் விட்டார்கள். இதை விட தேச விரோத காரியம் என்ன இருக்க முடியும் என்றார் வைகோ.
பழ.நெடுமாறன் பேசுகையில், அண்டை மாநிலங்களின் திமிர்வாதப் போக்கினால் தமிழகத்தின் 20 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலாற்றை நம்பி 10மாவட்டங்களும், காவிரியை நம்பி 5 மாவட்டங்களும், பெரியாற்றை நம்பி 5 மாவட்டங்களும் உள்ளன. இந்தப் பகுதி விவசாயிகளின் விவசாய வாழ்க்ைக இப்போது பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பக்கத்து மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்படும். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தாவிட்டால் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உணவு உற்பத்தி பெரும் பாதிப்பை சந்திக்கும்.
இைத உணர வேண்டியவர்கள் உணர மறுக்கிறார்கள். செய்ய வேண்டியதை விட்டு விட்டு நதிகளை இணைக்க வேண்டும் என கூச்சல் போடுகிறார்கள். யாரை ஏமாற்ற இந்தக் கூச்சல் என்று கோபமாக கேட்டார் நெடுமாறன்.
இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அதன் இணைச் செயலாளர் ஆற்றலரசு, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ேடாரும் கலந்து ெகாண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications