கணவர் மரணம்: மனம் உடைந்த நேபாள பெண் தற்கொலை
சென்னை:குளத்தில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற முயன்று கணவர் உயிரிழந்ததால் மனம் உடைந்த நேபாள நாட்டுப் பெண் அதே குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகே மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கூர்க்காவாக வேலை பார்த்து வந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த ருத்ரா பெளடல். தனது மனைவி கல்பனாவுடன் கல்லூரிக்கு அருகே குடியிருந்து வந்தார்.
அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு கூர்க்காவின் 10 வயது மகன் அருகில் உள்ள குளத்தில் மூழ்கி விட்டான். அவனை மீட்க ருத்ரா, குளத்தில் குதித்து சிறுவனை மீட்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அந்தப் பையனும் பரிதாபமாக இறந்து போனான்.
சிறுவனைக் காப்பாற்றப் போய் கணவரும் இறந்ததை அறிந்த கல்பனா மனம் உடைந்தார். பெரும் சோகத்தில் இருந்து வந்த அவர் நேற்று அதிகாலை கணவர் மூழ்கி இறந்த குளத்துக்குச் சென்று குதித்து விட்டார்.
சிறிது நேரத்திலேய நீரில் மூழ்கி அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications