சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமிதாக்குதல்: வீடுகள் தரைமட்டம்- பலர் பலி
ஹோனியாரா:தெற்கு பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் இன்று அதிகாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலில் பலர் பலியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டம்தான் சாலமன் தீவு. இங்கு இன்று அதிகாலை இந்திய நேரப்படி கடலுக்கு அடியில் மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8 ரிக்டராக இருந்தது.
இந்த பூகம்பம் காரணமாக சுனாமி அலைகள் தாக்கின. சாலமன் தீவின் தலைநகர் ஹோனியாராவுக்கு வட மேற்கில் உள்ள கிஸோ தீவு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்குள்ள ஏராளமான வீடுகள், ஒரு மருத்துவமனை ஆகியவை சேதமைடந்தன.
பலர் இந்த சுனாமி அலைத் தாக்குதல் மற்றும் பூகம்பத்திற்கு பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து மக்கள் அலறி அடித்துக் ெகாண்டு வீடுகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்கு ஓடினர்.
சுனாமி அலையில் சிக்கி கிஸோ தீவில் 12 வயது சிறுமி கடலில் மூழ்கி உயிரிந்தாள். அதேபோலா வயதான பெண்மணி ஒருவர் இடிபாடுகளில் சிக்கிப் பலியானார்.
சுனாமி அலைத் தாக்குதலின்போது கடல் அலைகள் 5 மீட்டர் அளவுக்கு உயரம் கொண்டிருந்ததாக ேநரில் பார்த்தவர்கள் ெதரிவித்தனர். பல வீடுகளுக்குள்கடல் நீர் புகுந்துள்ளது.
சாலமன் தீவின் மேற்கில் உள்ள சோய்சியூல் தீவில் ஏராளமான வீடுகளுக்குல் கடல் நீர் புகுந்து விட்டது. அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சாலமன் தீவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூ கினியாவில் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து கடலோரத்திலிருந்து இடம் பெயர்ந்தனர்.
பூகம்பத்தின் ைமயம், ஹோனியாராவின் வட மேற்கில் மையம் கொண்டிருந்ததாகவும், உள்ளூர் ேநரப்படி அதிகாலை 2.20 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டதாகவும் ஹவாயில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் முன்ெனச்சரிக்கை நடவடிக்கைைய மேற்ெகாண்டுள்ளன. இருப்பினும் சாலமன் தீவைத் தவிர வேறு எங்கும் சுனாமி தாக்கியதாக தகவல் இல்லை.
சாலமன் தீவுகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் அங்கு தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதி நிலவுகிறது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications