ரூ.1,100 கோடியில் நிலத்தடி மின் கேபிள்
சென்னை:கோவை, மதுரை, திருச்சி,நெல்லை, சேலம் ஆகிய மாநகரங்களில் ரூ. 1,100 கோடியில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் எரிசக்தி மற்றும் நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர்,
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது வருடத்திற்கு 40,000 விவசாயிகளுக்கு மோட்டர் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு வருவதப இனி 40,500 ஆக உயர்த்தப்படும். இதை 50,000 உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தற்போது மின்துறைக்கு 50 ஆண்டுகளாகின்றன.1957ல் பெருந்தலைவர் காமராஜரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு முதல்வர் பொன்விழா நடத்த இருக்கிறார். மின்துறையின் ஆண்டு வருமானம் ரூ.18,165 கோடி, இதற்கு 21,729 செலவிடப்படுகிறது. ரூ.3,000 கோடி கூடுதலாக செலவிட்ப்படுகிறது. இந்நிலையிலும் ஏழைகளுக்கு இலவச மின்சார திட்டம் தொடரும்.
தமிழ்நாட்டில் 325 இடங்களில் புதிதாக துணைமின்நிலையங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இதனால் எந்த இடத்திலும் மின்தடை, மின்னழுத்தம் ஏற்படாது. கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் கேபிளை பூமிக்கடியில் பதித்து மின் வினியோகம் செய்யும் திட்டம் ரூ.1,100 கோடியில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவிலேயே மின் இணைப்பு இல்லாத கிரமம் இல்லை என்ற பெருமையோடு தமிழ்நாடு முதல் இடத்திலுள்ளது.
ரஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 26 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முன் வந்துள்ளன. இதன் மூலம் 40,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ.1 லட்சத்து 60,000 கோடி முதலீடு செய்யப்படும்.
தற்போது மின்சார துறையில் 20,600 பேர் ஒப்பந்த ஊழியர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications