14வது சார்க் மாநாடு-டெல்லயில் துவக்கம்
டெல்லி:தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் முகம்மது அப்துல் கயூம், பூடான் பிரதமர் லியான்போ காண்டு வாங்க்சுங், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது ஆகிேயார் பங்ேகற்கின்றனர்.
சார்க் அமைப்பின் 8வது உறுப்பினராக புதிதாக ேசர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் சார்பில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய் பங்கேற்றார்.
முதல் முறையாக அெமரிக்கா, ஐேராப்பிய யூனியன், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பார்வையாளராக கலந்து ெகாண்டன.
சார்க் மாநாடுகளில் பார்வையாளராக கலந்து ெகாள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை சார்க் நாடுகள் ஏற்கனவே ஏற்றுக் ெகாண்டுள்ளன.
ெதற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டாலும், தீவிரவாதம் குறித்து அதிக அளவில் விவாதம் இடம்பெறும் எனத் தெரிகிறது.
சார்க் மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications