10வது வகுப்பு வினாத்தாள் லீக்-தேர்வு ரத்துதிருடிய பிளஸ்டூ மாணவன் கைது-3 பேர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

தேனி:தேனியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பத்தாவது வகுப்பு சமூக அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் திருடப்பட்டதால், நாளை நடைபெறவிருந்த தேர்வு 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வினாத்தாள்களை திருடிய பிளஸ்டூ மாணவனை போலீஸார் கைது செய்தனர். 2 தலைமை ஆசிரியர்கள் உள்பட 3 பேர் இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் சட்டசபையில் நேற்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், தேனி மாவட்டம் அல்லி நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அலுவலக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தபோது அறையின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு வினாத்தாள் எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தும் வினாத்தாட்கள் களவுபோயிருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதனால் இந்த பாடத்திற்கு புதிய வினாத்தாள் அச்சிடப்பட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 2,634 தேர்வு மையங்களிலும் ஏப்ரல் 11ம் தேதி புதன்கிழமை தேர்வு நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வினாத்தாள் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த வினாத்தாள் திருட்டு தொடர்பாக போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவபாண்டியன்தான் வினாத்தாள்களை திருடியதாக தெரியவந்தது.

இதுக்குறித்து அவனிடம் விசாரணை செய்த போது, தன்னுடன் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கூட அறையிலுள்ள வினாத்தாள்களை கொண்டு வர முடியுமா என சவால் விட்டனர்.

அதனால் தான் ஜன்னல் கம்பியை வளைத்து அறையினுள் புகுந்து அந்த வினாத்தாள்களை திருடியதாகக் கூறியுள்ளான். இதையடுத்து சிவபாண்டியன் கைது செய்யப்பட்டான்.

மேலும் வினாத்தாட்கள் மையக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தலைமை ஆசிரியர்களும், பள்ளி காவலாளியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+