கைவிடப்பட்ட கக்கனின் மகன்
சென்னை:எளிமை, நேர்மையின் மறு உருவமாக ஒரு காலத்தில் திகழ்ந்து, ஏழ்மையில் வாடி மறைந்து போன முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் கடந்த 18 வருடங்களாக கவனிப்பாரின்றி மன நல மருத்துவமனையில் வாடி வரும் சோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழகம் கண்ட தங்கமான அரசியல்வாதிகளில் மிகவும் அரிய மனிதர் கக்கன். மதுரையைச் சேர்ந்த கக்கன், பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இருந்தவர். இவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
இப்போதுள்ள காங்கிரஸ் தலைவர்களைப் போல கோடிகளில் புரளாமல், சாதாரண வேட்டி, சட்டையில் நடமாடிய பெரும் மனிதர் கக்கன். ஏழ்மைதான் இவரது பெரும் சொத்து. நேர்மைதான் இவரது மானமாக இருந்தது.
கடைசி வரை மாறாத மனிதராக இருந்து மறைந்து போன மாமனிதர் கக்கனின் மகன் கடந்த 18 வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் கவனிப்பாரின்றி பரிதவித்து வருவது வேதனையிலும் பெரும் வேதனையாகும்.
கக்கனுக்கு மொத்தம் 5 மகன்கள். இதில் கடைசி மகன்தான் நடராஜ மூர்த்தி. இப்போது இவருக்கு 51 வயதாகிறது. இளம் வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார் நடராஜ மூர்த்தி. ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் படிப்பை விட நேர்ந்தது. பின்னர் அவரால் படிக்கவே முடியாமல் போய் விட்டது.
1987ம் ஆண்டு மன நலம் மிகவும் மோசமாகி கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை அங்குதான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு இப்போது உள்ள ஒரே துணை, ஆறுதல், கனக விஜயன் என்பவர் மட்டுமே. 56 வயதாகும் இவர்தான், நடராஜ மூர்த்தியின் உதவியாளர் போல இருந்து வருகிறார். ஹோட்டலில் சர்வராக இருக்கும் கனக விஜயன் அடிக்கடி வந்து கக்கனின் மகனைப் பார்த்து பேசி விட்டுச் செல்கிறாராம்.
நடராஜமூர்த்தி குறித்து கனக விஜயன் கூறுகையில், கடந்த 18 வருடங்களாக நான்தான் வந்து பார்த்துச் செல்கிறேன். காங்கிரஸ்காரர்கள் ஒருவர் கூட வருவதில்லை.
18 வருடங்களில் எத்தனையோ காங்கிரஸ் தலைவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் ஒருவர் கூட இந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை. இவர் கக்கனின் மகன் என்று கூட பலருக்குத் தெரியாது. தமிழக அரசு மனது வைத்து நடராஜ மூர்த்திக்கு உதவ வேண்டும்.
கக்கனின் இன்னொரு மகனான பாக்கியநாதன் வீடு கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரையும் அரசு அரவணைக்க வேண்டும் என்றார் வேதனையோடு.
மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், சொகுசு கார்கள், அப்பழுக்கற்ற வேட்டி, சட்டை, அகங்கார பேச்சுக்கள், கொட்டிக் கிடக்கும் பணம் என கோடிகளில் புரண்டு வரும் இந்தக் கால அரசியல்வாதிகளின் கண்களுக்கு கக்கனின் மகன் கடுகு போலத்தானே தெரிவார்.
நல்ல உள்ளங்கள் உதவ முன்வந்தால் கக்கனின் ஆவி கண்டிப்பாக அவர்களை வாழ்த்தும்
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications