அதிமுக எம்எல்ஏ வீடு சூறை-அப்பாவுக்கு அடி
ஒரத்தநாடு:தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏ வி.பி. கலைராஜனின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. கலைராஜனின் வயதான தந்தையும் தாக்கப்பட்டார்.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன். சட்டசபையில் நேற்று ஏற்பட்ட பெரும் அமளி காரணமாக அவர் உள்பட 4 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கலைராஜனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் உள்ள அவரது வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.
இந்த வீட்டில் கலைராஜனின் தந்தை பட்டுச்சாமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு நள்ளிரவு 1 மணிக்கு மேல் 20 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து, வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது.
பட்டுச்சாமியையும் அக்கும்பல் தாக்கியது. அவர் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.
சம்பவம் குறித்து அறிந்ததும் அதிமுகவினர் அங்கு கூடினர். போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பட்டுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தகவல் அறிந்த கலைராஜன், சென்னையிலிருந்து தஞ்சை மாவட்ட எஸ்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
தாக்குதல் நடத்திய கும்பலில் இருந்தவர்கள் அத்தனை பேரும் திமுகவினர் என்று பட்டுச்சாமியும், அதிமுகவினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்?












Click it and Unblock the Notifications