Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருந்துக் கடையில் மஜா: மது போதையில்துணை நடிகை சாவு - வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னைமருந்துக் கடையில் மது அருந்தி விட்டு, மருந்துக் கடை உரிமையாளருடன் உடலுறவு கொண்டு விட்டு உறங்கிய துணை நடிகை ரத்த அழுத்தம் அதிகமாக இறந்தார். மருந்துக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வட பழனி, பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரீனா. 35 வயதாகும் இவர் துணை நடிகை ஆவார். படையப்பா, யூத் உள்ளிட்ட பல படங்களில் நடன நடிகையாகவும், சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு இரு கணவர்கள். முதல் கணவரை விட்டுப் பிரிந்து விட்டார். அவர் மூலம் பிறந்த குழந்தையுடன், தேவநேசம் என்பவரை மணந்து கொண்டு வசித்து வந்தார்.

தினசரி மது அருந்தும், தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கம் அவருக்கு உண்டு. விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மருந்துக் கடையில்தான் அடிக்கடி தூக்க மாத்திரை வாங்குவார். அப்போது அந்தக் கடையின் உரிமையாளரான உதயராஜனுடன் (23) கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Reena

தினசரி உதயராஜனின் கடைக்கு இரவு வந்து விடுவாராம். மருந்துக் கடையில் இரவில் இருவரும் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மருந்துக் கடைக்குள்ளேயே மது அருந்தி விட்டு இருவரும் உற்சாகமாக இருந்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பும் ரீனா மருந்துக் கடைக்கு வந்துள்ளார் இரவு முழுவதும் மது அருந்தி விட்டு உற்சாகமாக இருந்துள்ளனர். அதிகாலையில் உதயராஜன் எழுந்து ரீனாவை எழுப்பியுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து போய்க் கிடந்தைத்ப் பார்த்து அதிர்ந்து போனார் உதயராஜன்.

உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ரீனாவின் உடலைக் கைப்பற்றி அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரீனாவின் மரணம் குறித்து உதயராஜனிடம் விசாரித்தபோது, அவர் மதுவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து, ரீனாவிடம் இன்பம் அனுபவித்தது தெரிய வந்தது. இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி ரீனா இறந்ததும் தெரிய வந்தது.

Devanesan

உதயராஜன் போலீஸாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள பேரையூர் ஆகும். எனது அக்கா சாந்தி ஒரு டாக்டர். அவரது மருத்துவமனைக்கு அருகிலேயே எனக்கு மருந்துக் கடை வைத்துக் ெகாடுத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரவு எனது கடைக்கு ரீனா வந்தார். அவசரமாக தூக்க மாத்திரை தேவைப்படுவதாக அவர் கூறினார். ஆனால் டாக்டர் சீட்டு இல்லாமல் தர முடியாது என்று கூறினேன்.

ஆனால் அவரோ, என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து மாத்திரை கொடுங்களேன் என்று கேட்டதும் எனக்கு அவர் மீது மோகம் பிறந்தது. அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என நினைத்த நான் மருந்தைக் கொகொடுத்ேதன். அதற்குப் பரிசாக உங்களைத் தர வேண்டும் என கேட்டேன். ரீனாவும் ஒத்துக் கொண்டார்.

எனது காம ஆசையால் வயது வித்தியாசத்தை மறந்து விட்டேன். தூக்க மாத்திரையுடன் எனது அக்காவின் மருத்துவமனையில் உள்ள ஒரு பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு உல்லாசமாக இருந்தேன். அதன் பிறகு அது தொடர் கதையாகியது.

உல்லாசத்திற்குள் நுைழவதற்கு முன்பு உற்சாக பானத்தை அருந்துவோம். பிறகு விடிய விடிய உல்லாசமாக இருப்போம். எனது மருந்துக் கடையிலேயே பின்னர் இந்தக் கூத்து தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவும் ரீனா எனது கடைக்கு வந்தார். ஆனால் அவர் உல்லாச மூடில் இல்லை. மாத்திரையை மட்டும் வாங்கிக் கொண்டு போக அவர் அவசரப்பட்டார். ஆனாலும் விடாத நான் மது அருந்தி விட்டாவது போகலாம் என்றேன். அவரும் சம்மதித்தார்.

பின்னர் கடைக்குள் அவரைக் கூட்டிச் சென்றேன். மதுவுடன் தூக்க மாத்திரையைக் கலந்து அவருக்குக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவர் தூக்க நிலைக்குப் போய் விட்டார். அதன் பின்னர் எனது பசியைத் தீர்த்துக் கொண்டேன்.

காலையில் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது என்று புலம்பியுள்ளார் உதயராஜன்.

அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+