திருவிழாவில் பட்டாசு விபத்து: 3 பேர் பலி
வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த கோவில் திருவிழாவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள சென்றாம்பள்ளி கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. இங்கு ராம நவமியையொட்டி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திருவிழாவில் பங்கேற்றனர்.
இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகள், வான வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. இதில் ஒரு ராக்கெட், அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது போய் விழுந்து வெடித்தது. ஆட்டோவில் பொருத்தப்பட்ட காஸ் சிலிண்டரில் தீப்பொறி பட்டதால் பலத்த சப்தத்துடன் ஆட்டோ வெடித்துச் சிதறியது.
மேலும் அந்த ஆட்டோவிலும் பல பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்ததால் அத்தனையும் சேர்ந்து படபடவென ஒரே நேரத்தில் வெடித்து அந்தப் பகுதியே பெரும் போர்க்களம் போல மாறியது.
இந்த பயங்கர வெடிவிபத்து மற்றும் தீவிபத்தில் சிக்கி ஆகாஷ் என்ற 12 வயது சிறுவனும், அசோக்குமார் என்ற வாலிபரும் இறந்தனர். இன்னொரும் இந்த விபத்தில் பலியானார். ஆனால் அவர் யார் என்பது தெரியவில்லை. 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக ராமர் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications