டெல்லியில் பரபரப்பு - 183 பயணிகளுடன்வானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம்
டெல்லி:ஷாங்காய் நகரிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது. பின்னர் தரையிறங்கியபோது முன்பக்க டயர் வெடித்து தரையில் உரசியபடி நின்றதால் பரபரப்பு பன்மடங்கு அதிகரித்தது.
ஷாங்காய் நகரிலிருந்து பாங்காக் வழியாக டெல்லிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் 183 பேர் இருந்தனர். விமானம் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. 3 முறை முயன்றும் தரையிறக்க முடியவில்லை. சுமார் 1 மணி நேரமாக விமானம் வானில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிள் பெரும் பீதியடைந்தனர்.
பின்னர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னர் விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் விமானம் ஓடியபோது, விமானத்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதையடுத்து விமானம் தரையில் உரசியபடிய நிலை தடுமாறி நின்றது.
இருப்பினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பயணிகள், விமான ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.
விமானம் தரையில் உரசியபடி நின்றதால், அந்த விமான ஓடுபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 2வது ஓடுபாதை திறந்து விடப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து விசேஷ கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் பின்னர் விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும்.
இந்த பதட்டம் காரணமாக இன்று காலை சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications