வெடிவிபத்தில் தேடப்பட்ட 3 பேர் கைது
விழுப்புரம்:விழுப்புரம் அருகே நடந்த வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே செண்டூர் கிராமத்தில், வெடிபொருட்களுடன் சென்ற கார் வெடித்து 16 பேர் பலியானனர். புதுச்சேரி, மணலிப் பட்டையைச் சேர்ந்த சேகர் என்பவரிடமிருந்து இந்த வெடிபொருட்களை சப் டீலர்களான அண்ணாமலை, நாகப்பன், சண்முகம் ஆகியோர் வாங்கி சாலை அமைக்கும் பணிக்கு பாறைகளை உடைப்பதற்காக வெடிபொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்களை நாகப்பன், அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் ஜீப்பில் கொண்டு சென்றுள்ளனர். அவர்களுடன் சேகரிடம் வேலை பார்க்கும் பலராமன், குமார் ஆகியோரும் சென்றுள்ளனர். பாபு என்பவர் ஜீப்பை ஓட்டியுள்ளார்.
தென்னாலப்பாக்கத்தில் உள்ள சேகரின் கிட்டங்கி அருகே நாகப்பன், அண்ணாமலை, சண்முகம் ஆகியோர் இறங்கிக் கொண்டனர். குமார், பாபு, பலராமன் ஆகியோர் மட்டும் வெடிபொருட்களுடன் சென்றுள்ளனர். விபத்தில் இந்த 3 பேரும் இறந்து விட்டனர். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து 3 பேரும் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்தனர். இதில் மூன்று பேரும் சிக்கியுள்ளனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று 150 டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், 372 மீட்டர் வயர்கள் ஆகியவற்றை ஜீப்பில் கொண்டு சென்றதாக கைதான 3 பேரும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் நாச வேலை எதுவும் இல்லை, கவனக் குறைவாக எடுத்துச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications