ஒரு நாள் போட்டியிலிருந்து லாரா ஒய்வு
கிரெனடா:உலகக் கோப்பை தொடருக்குப் பின் ஒருநாள் போட்டியில் இருந்து விலகப் போவதாக மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் லாரா கூறியுள்ளார்.
உலககோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 4 நான்கு போட்டியில் தோல்வி அடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் லாரா ஒருநாள் போட்டியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உலகக் கோப்பை போட்டிக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த அணியில் நான் இடம்பெற மாட்டேன்.
உலகக் கோப்பைக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணியில் நிறைய இளம் விரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நான் ஒரு நாள் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என அவர் கூறினார்.
உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துடன் மோதவுள்ளது. இதுவே லாராவின் கடைசி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
37 வயதாகும் லாரா 1990ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானர். இதுவரை 297 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள லாரா 10,354 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதமும், 63 அரைசமும் அடித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications