பாலாற்றில் அணை-ஆந்திரா ரகசிய ஏற்பாடு
வேலூர்:பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்ட வரும் 25ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தவுள்ளது. இதன் ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.
கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக தமிழகத்துக்கு வருகிறது. இந்த தண்ணீரின் மூலம் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1 லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெற்று வருகின்றன.
கர்நாடக அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பாணைகளை கட்டியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது.
இந் நிலையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்து ரகசியமாக பூமி பூஜையும் நடத்தியது. இதற்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார்.
ஆனால் ஆந்திர பட்ஜெட்டிலும் அணை கட்டுவதற்காக ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் வரும் 25ம் தேதி பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்த ஆந்திர அரசு ரகசிய ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளும், சித்தூர் மாவட்ட கலெக்டரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா?












Click it and Unblock the Notifications