அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை
பாலாசூர்:அணு ஆயுதத்துடன் 3,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக ஏவி சோதனையிட்டது.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள டி.ஆர்.டி.ஓவின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ஏவுகணை இன்று காலை 10.52 மணிக்கு ஏவப்பட்டது.
கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஏவுகணை 90 கி.மீ. உயரத்துக்கு நேராக பாய்ந்து சென்று பூமியின் வளி மண்டலத்தைக் கடக்கும். பின்னர் அங்கிருந்து பூமிக்குள் நுழையும் இலக்கை நோக்கி பாயும்.
இன்று ஏவப்பட்ட ஏவுகணை கார் நிகோபார் தீவுகளுக்கு அருகே உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஏவப்பட்ட 15வது நிமிடத்தில் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை ஏவுகணை தாக்கியது.
இந்த சோதனை மூலம் தெற்காசியாவில் அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. பாகிஸ்தானிடம் இத்தனை தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை இல்ைல. ஆனால், சீனாவிடம் அக்னி-3யை விட சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
16 மீட்டர் உயரமும் 1.8 மீட்டர் விட்டமும் கொண்ட அக்னி-3 ஏவுகணை 48 டன் எடை கொண்டது. 1.8 டன் எடை கொண்ட ஆயுதத்தை ஏந்திச் செல்லும் வலிமை கொண்டது. ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை செயலிழக்கச் ெசய்யும் ஜாமர்களும் இதில் உள்ளன.
2006ம் ஆண்டு முதன் முதலில் இந்த ஏவுகணை சோதனையிடப்பட்டது. இப்போது இரண்டாவது சோதனை நடந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications