அதிமுக எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்-நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி
சென்னை:அதிமுக எம்எல்ஏ கலைராஜனின் வீட்டை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து சட்டசபையில் அதிமுக பிரச்சனை கிளப்பியது. அக் கட்சியின் எம்எல்ஏ வைத்தியலிங்கம் பேசுகையில்,
ஒரத்தநாட்டில் உள்ள சென்ைன தி.நகர் எம்எல்ஏ கலைராஜனின் வீடு கடந்த 5ம் தேதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய சமூக விரோதிகளுக்கு போலீசாரும் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது என்றார். இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அடுத்துப் பேசிய மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன், டிரான்ஸ்பார்மரை செயலிழக்கச் செய்துவிட்டு, இருட்டுச் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அச்சமின்றி நடமாடும் நிலை ஏற்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
நள்ளிரவு 1 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இது குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ெசய்திருப்பதால் அங்கு இப்போது அமைதி நிலவுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகள் முன்பு எதிர்க் கட்சியாக இருந்த எங்கள் கட்சியினர் மீதும் நடந்திருக்கின்றன.
அவைகளுக்கெல்லாம் எந்த அளவுக்கு இங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவைகளையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு இப்போது நடவடிக்கை எடுக்கப்படாமல், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியை இந்த அவைக்குத் தருகிறேன் என்றார் கருணாநிதி.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications