வெடி விபத்து-கருணாநிதி ஏன் வரவில்லை: விஜயகாந்த் கேள்வி
விழுப்புரம்:பாராட்டு விழாவிற்கு மட்டும் செல்லும் முதல்வர் திண்டிவனம் செண்டூர் வெடிவிபத்தை பார்வையிட ஏன் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
செண்டூரில் காரில் ஜெலாட்டின் குச்சிகள் வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி பேசிய அவர்,
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000 வழங்கியுள்ளேன்.
ஜெலட்டின் குச்சி வெடித்ததால் மட்டுமே இந்த அளவு பாதிப்பு ஏற்படாது. ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம். இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யார் யார் என கண்டறியப்பட வேண்டும். அதற்கு முதல்வர் உத்தரவிடவேண்டும்.
இவர்களுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் நிதியுதவி போதாது. கன்னியாகுமரி மீனவர்களுக்கு வழங்கியது ரூ.5 லட்சமும், அரசு வேலையும் வழங்கவேண்டும். போர்கால அடிப்படையில் வீடுகள் கட்டி தரவேண்டும்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் முழு பாதிப்பு எனவும், மற்றவர்களுக்கு குறைந்த பாதிப்பு எனவும் கணக்கெடுப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர்.அரசு எல்லோருக்கும் பொதுவாக கணக்கெடுக்க வேண்டும்.
விபத்து நடந்த இடத்திற்கு இதுவரை முதல்வர் நேரில் வந்து பார்வையிடாமல் இருப்பது ஏன், பாராட்டுவிழா என்றழைத்தால் மட்டும் பங்கேற்றும் அவர் இந்த இடத்திற்கு வராதது ஏன். மதுரையில் நடந்த தன் மகனின் பிறந்த நாளுக்கு சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு வந்தவர், இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவறிவிட்டார் என்றார் விஜய்காந்த்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications