அந்தமான் to
போர்ட் பிளேயர்:அந்தமான் நிக்கோபார் தீவில் போலீஸாக பணியாற்றி வந்த அருண் ஆனந்த்ராஜ் என்பவர் ஏராளமான அரசுப் பணத்தை சுருட்டிக் கொண்டு சென்னைக்கு கம்பி நீட்டிவிட்டார்.
இதுகுறித்து அந்தமான் தீவின் போலீஸ் உயரதிகாரி அசோக் சந்த் கூறுகையில்,
அருண் அந்தமான் நிக்கோபார் தீவில் போலீசில் கடன் வழங்கும் பிரிவில் கிளார்க்காக இருந்தார். அவர் பல லட்சங்களை எடுத்து கொண்டு இந்த தீவை விட்டு ஓடிவிட்டார்.
கடந்த 13ம் தேதி திருமணமான பெண்ணுடன் இங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். இதுவரை அவரை கண்டிபிடிக்க முடியவில்லை. அவரை பிடிப்பதற்கான முயற்சிகள் எடுத்துவருகிறோம்.
அவருடைய புகைப்படம், மற்ற விவரங்களை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
அருணுடன் ஓடிய அந்த பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதில் பெண் குழந்தையை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications