சட்டசபையில் இன்றும் அதிமுக வெளிநடப்பு
சென்னை: 4 அதிமுக எம்எல்ஏக்களை இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது.
முன்னதாக அதிமுக துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
கடந்த ஏப்ரல் 5ம் தேதி சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையில் (செருப்பை காட்டி கலாட்டா செய்தது) 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்கள் தங்கள் கடமையை செய்வதிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளனர்.
புரட்சித் தலைவரை விமர்சித்து பேசியதால் உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சிகாரர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அதிமுக உறுப்பினர் செருப்பை தூக்கி காட்டியது முறைதானா என யோசிக்க வேண்டும். இதற்கு எதிர்கட்சி துணை தலைவர் வருத்தம் தெரிவித்தால் பேரவை தலைவர் இந்த தீர்ப்பை பற்றி பரிசீலிக்கலாம் என்றார்.
அதற்கு பன்னீர் செல்வம், எங்கள் தரப்பில் மட்டும் தான் தவறு இருந்ததாக கூறுகிறீர்களே, இரு தரப்பிலும் பிரச்சனை செய்யப்பட்டது. எனவே 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு எம்எல்ஏ சிவபுண்ணியம் பேசுகையில், எம்எல்ஏக்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தங்கள் கருத்துகளை கூறவும், ஆளும்கட்சியை பற்றி எடுத்து கூறவும் எம்எல்ஏக்களுக்கு உரிமையுண்டு. ஆனால் கூச்சலிடுவது, சபாநாயகர் இருக்கையை நோக்கி முற்றுகையிடுவது, செய்கை மூலம் பேசுவது, உட்கார்ந்து கொண்டே பேசுவது போன்ற செயல்கள் குற்றமாகும். எனவே எதிர்கட்சி துணைதலைவர் வருத்தம் தெரிவித்து பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்றார்.
பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி பேசுகையில், அதிமுக 4 எம்எல்ஏக்களையும் மீண்டும் சபைக்கு அழைத்து, தங்கள் தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச அனுமதியளிக்க வேண்டும். இனி அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என அவர்களோ அல்லது எதிர்கட்சி துணை தலைவரோ வாக்குறுதியளிக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் பேசுகையில், இதற்கு முன் இதுபோல பலமுறை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் எம்எல்ஏ ரங்கநாதன் கைது செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் ஒரு மாதம் சபையை விட்டு நீக்கி வைக்கப்பட்டிருந்தார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையளிப்பது தவிர்க்க முடியாது. எனவே எதிர்கட்சி துணைத் தலைவரிடம் வாக்குறுதி பெற்று கொண்டு அவர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், நான் அந்த பிரச்சனைக்கு உள்ளே போக விரும்பவில்லை என முதலிலேயே கூறினேன். ஆளும் கட்சி கூட்டணி கட்சிகள் சொன்னதையே திரும்ப திரும்ப கூறுகின்றனர் என்றார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் ஆவுடையப்பன், நான் அளித்த தீர்ப்பு தவறு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
அமைச்சர் அன்பழகன் பேசுகையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பேரவை தலைவரின் தீர்ப்பு மட்டுமல்ல, சபையின் தீர்மானமும் ஆகும். இந்த பிரச்சனையில் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றால், தண்டிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இருசாராரும் சேர்ந்துதான் செய்வதான் அமளி. ஆனால் அத்துமீறுவது தவறு. எனவே வருத்தம் தெரிவித்தால் சபாநாயகரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய பன்னீர் செல்வம், தீர்மானம் செய்து தான் தீர்ப்பு வழங்கியதாக கூறுகிறீர்கள். இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு. இதை மறுபரிசீலனை செய்ய கோரி வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களும், வழக்கம்போல மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!












Click it and Unblock the Notifications