பிரேம்குமார் டிஸ்மிஸ் ஆகவில்லை: அரசு
சென்னை:எஸ்.பி. பிரேம்குமார் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சர்வ வல்லமை படைத்த எஸ்.பியாக இருந்தவர் பிரேம்குமார். இவரை வைத்து பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ வேல்முருகனை டபாய்த்தார் ஜெயலலிதா.
பின்னர் வந்தது சங்கரராமன் கொலை வழக்கு. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்ட பிரேம்குமார், விசாரணை அதிகாரியை ஓரம் கட்டி விட்டு தானே நேரடி விசாரணையில் இறங்கினார். ஜெயேந்திரரை அதிரடியாக கைது செய்தார்.
இந்த வழக்குக்குப் பின்னர் அவர் சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தை மிரட்டியதாக பிரேம்குமார் மீது திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டராக இருந்தபோது நல்லகாமன் என்ற முன்னாள் ராணுவ வீரரை கையில் சங்கிலி கட்டி தெருத் தெருவாக ஊர்வலமாக இழுத்துச் சென்றும், தாக்கியும் சித்திரவதை செய்த வழக்கில் பிரேம்குமாருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை 1 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்தச் சூழ்நிலையில், அரசியல் சட்டத்தின் 311வது பிரிவின் கீழ் பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப் பிரிவின் கீழ் பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், தேச விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீதுதான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப்படும்.
இதுவரை 2 முறை மட்டுமே இந்த சட்டப் பிரிவின் கீழ் தமிழக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் மாமண்டூர் அருகே விடுதலைப் புலிகளை தப்ப விட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மீது இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடுத்து, மதுரை திருமங்கலத்தில் இமாம் அலி உள்ளிட்டோர் தப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது இந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்குத்தான் உள்ளது. எனவே பிரேம்குமார் இந்த சட்டப் பிரிவின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தால் ஆளுநர் மாளிகை முறைப்படியான அறிக்கையை வெளியிட்டிருக்கும்.
ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதுவரை பிரேம்குமார் மீது 311வது பிரிவின் கீழ் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதேசமயம், கிரிமினல் சட்டப்பட்டி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட உங்களை ஏன் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று கேட்டு பிரேம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் நேற்று இரவு அரசு வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பிலும், பிரேம்குமார் டிஸ்மிஸ் ஆனதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications