கருணாநிதி பொன்விழா-கலாம் வர மறுப்பு
சென்னை:சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை உறுப்பினராகி 50 ஆண்டுகளை முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளதால், இதையொட்டி சட்டசபையில் இரு நாள் கொண்டாட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மே 11ம் தேதி சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சபாநாயர் ஆவுடையப்பன் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வெளிநாடு போவதால், சட்டசபையில் உரை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் சட்டசபையில் இன்று வாசித்தார். ஆவுடையப்பன் கூறுகையில், வெளிநாடு செல்வதால், சட்டசபையில் உரை நிகழ்த்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திட்டமிட்டபடி சட்டசபையில் உரை நிகழ்த்துவார். மறு நாள் நடைபெறும் பாராட்டு விழாவிலும் பங்கேற்பார்.
மேலும், சட்டசபைக் கூட்டத் தொடரை மே 11ம் தேதிக்குப் பதில் 12ம் தேதி வரை நீட்டிக்க சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிைலயில் கலாம் தனது இயலாமையை தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கலாம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியல் கலாமை உரை நிகழ்த்த வருமாறு அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அழைப்பு விடுத்தார்.
ஆனால் சட்டசபையில் ஜனநாயகம் இல்ைல. எனவே உரை நிகழ்த்துவதைத் தவிர்க்கவும் என குடியரசுத் தலைவருக்கு அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கோரிக்ைக விடுத்தது. அந்தப் பின்னணியில் காளிமுத்துவின் அழைப்பை ஏற்கவில்லை கலாம் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்?












Click it and Unblock the Notifications