மது பாருக்கு பரிந்துரைத்த சபாநாயகர்:அதிமுக பரபரப்பு ஊழல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:நெல்லை மாவட்டத்தில் இரு டாஸ்மாக் மதுக் கடைகளில் பார்கள் நடத்த திமுகவினருக்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் பரிந்துரைத்ததாகவும், இதில் பெருமளவு பணம் கைமாறியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அதிமுக கோரியுள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கொறடா கே.ஏ.செங்ேகாட்ைடயன் மற்றும் முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார் ஆகிேயார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது

கடந்த 2000மாவது ஆண்டு மே 13ம் தேதியிலிருந்து தங்களது இயக்குநரகத்தின் நடவடிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், அவர்கள் தரும் கட்டளைகளுக்கு கீழ்படியும் ஒரு அமைப்பாகவும், அதிமுகவுக்கு எதிராகவும் தங்களது இயக்குநரகத்தின் செயல்பாடுகள் உள்ளன.

இப்போது நாங்கள் தருகின்ற புகாரானது, வலுவான, ஆதாரங்களோடு கூடிய புகாராகும். இந்தப் புகாரின் மீது உரிய முறையில் செயல்பட்டு நடவடிக்ைக எடுக்க ேகாருகிறோம்.

சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன், அவரது அரசியல் நேர்முக உதவியாளர் மு. வெங்கடேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல்ைல மாவட்ட மேலாளர் சிவசங்கரன், செங்கோட்டை திமுக நகர இளைஞர் அணி அமைப்பாளர் ரபீக் காதர் ெமாய்தீன், ஆகிேயார் கூட்டாக சதி செய்து, பொருள் ஆதாயம் பெறவும், அதன் விளைவாக தமிழக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தவும், அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவின் பேரில், அவருடைய ேநர்முக உதவியாளர் வெங்கடேசன், 22.2.2007 அன்று சிவசங்கரனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் புளியறை என்ற இடத்தில், உள்ள டாஸ்மாக் மதுக் கடை எண் 10886 மற்றும் பார்டர் பகுதியில் உள்ள மதுக் கடை எண் 10899 ஆகிய இரு கடைகளிலும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதில் பல லட்சம் ரூபாய் பணம் கைமாறியுள்ளது. எத்தனை லட்சம் ரூபாய் கைமாறியது, எப்படி கைமாறியது என்பது குறித்து தங்களது இயக்குநரகம் புலன் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.

ஆவுடையப்பன், வெங்கடேசன், சிவசங்கரன் ஆகிேயார் பொது ஊழியர்கள். வெங்கடேசனின் கடிதம் கிடைக்கப் பெற்ற சிவசங்கரன், 28.2.2007 அன்று ந.க.எண் 156/2005 என்ற துறை சார்ந்த உத்தரவின்படி, ரபீக் காதர் ெமாய்தீனுக்கு 10899 என்ற எண் கொண்ட கடையுடன் இணைந்த மதுக் கூடங்களில் காலி பாட்டில் சேகரிப்பு, திண்பண்ட விற்பனை அனுமதி ஆகியவற்றை தந்து ஆவுடையப்பனின் உத்தரவுப்படி ரபீக் காதர் ெமாய்தீனை ஒப்பந்தக்காரராக உறுதி செய்து ஆணை வெளியிட்டுள்ளார்.

இதில் ெபரும் ஆதாய முறைகேடு நடைபெற்று கூட்டு சதித் திட்டம் மற்றும் குற்ற முறைகேடு, லஞ்சம் பெறுதல், கொடுத்தல் ஆகிய குற்ற நடவடிக்கைகளில் பொது ஊழியர் என்ற அடிப்படையில், ஆவுடையப்பன், வெங்கடேசன், சிவசங்கரன் ஆகிேயார் நேரிடையாக ஈடுபட்டு தங்களது அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆகவே லஞ்ச ஒழிப்புச் சட்டம் மற்றும் பல்வகை இனம் சார்ந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கினை, முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+