பாக்தாத் அருகே பயங்கர கார் குண்டுவெடிப்பு:200 பேர் பலி - ஈராக்கில் பெரும் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடந்த 4 கார் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
![]() |
ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள சத்ரியா என்ற பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நடந்தது. ராணுவ சோதனைச் சாவடியில் நின்றிருந்த வாகனக் கூட்டத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காருடன் வந்த தீவிரவாதிகள் பயங்கரமாக மோதினர்.
இதில் 140 பேர் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. இறந்தவர்களின் உடல் பாகங்கள் பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. அப்பகுதி முழுவதும் மரண ஓலமாக காணப்பட்டது. மினி பஸ்களில் பயணம் செய்த பலர் குண்டுவெடிப்பில் சிக்கி பஸ்சுக்குள்ளேயே எரிந்து கருகினர்.
![]() |
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது. பிரதமர் மாலிக்கியைக் கடுமையாகக் கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
சதர் நகரில் நடந்த இன்னொரு சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர மேலும் இரு இடங்களில் கார் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications