கிருஷ்ணசாமியை முற்றுகையிட்ட மகளிர் காங்.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை முற்றுகையிட்டு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த பெண்கள் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவின்போது பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் மகளிர் காங்கிரஸைச் சேர்ந்தவரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆலிஸ் மனோகரியின் ஜாக்கெட், சேலை கிழிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் தூண்டுதலின் பேரில்தான் தான் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக ஆலிஸ் மனோகரி புகார் கூறினார். இதுதொடர்பாக காவல்துறை ஆணையரிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சத்தியமூர்த்தி பவனில் ஆலிஸ் மனோகரி தலைமையில் 100 பேர் கூடி திடீர் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்த ஆலிஸ் கூறுகையில், எம்.எல்.ஏ. ஜெயகுமார், அவரது ஆதரவாளர்கள் செங்கை செல்லப்பா, ஏழுமலை, நாகராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை போராட்டம தொடரும் என்றார்.
அப்போது வெளியே வந்த கிருஷ்ணசாமி உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் சென்று, நான் பார்த்துக் கொள்கிறேன், போராட்டத்தை கைவிடுங்கள் என்றார்.
ஆனால் போராட்டத்தைக் கவிட மறுத்த பெண்கள், கிருஷ்ணசாமியையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் ஆலிஸ் மனோகரியையும், முக்கிய நிர்வாகிகளையும் உள்ளே அழைத்து கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications