மதசார்பின்மையின் வக்கிரம்-இல.கணேசன் தாக்கு
சென்னை:பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்க முயற்சி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பொதிகை தொலைக்காட்சி ஒரு வேண்டுகோளை விளம்பரப்படுத்தி வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வருகிறது.
போட்டிக்கான தலைப்புகளைப் பாருங்கள்
1. தேசபக்தி பாடல்கள்
2. இஸ்லாமிய பாடல்கள்
3. கிருஸ்துவ மத பாடல்கள்
இதில் இந்து பக்தி பாடல்களுக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை தேசபக்தி என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் என பொதிகை டிவி நினைத்துவிட்டதோ என்னவோ
பொதிகை நிலைய பொறுப்பாளர் எவராவது தனது மத உணர்வை அல்லது மத எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியிருந்தால் அது நடவடிக்கைக்கு உரியது.
அல்லது அரசே இந்த விஷயத்தில் கொள்கைரீதியிலான முடிவை எடுத்திருக்குமானால் அது மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனை என்று தான் கொள்ள வேண்டும்.
நாடு பிளவுபட்டபோது எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் பெருவாரியாக வாழ்கிறார்களா அந்தப் பகுதி பாகிஸ்தானாக ஆகிவிடும் என்பது அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.
ஆனால், சுதந்திர பாரதத்துக்குள் உள்ள பகுதி தனியாகப் போக வேண்டுமானால் அந்தப் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நோக்கோடு சில சக்திகள் பணிபுரிந்து வருகின்றன.
ஏற்கனவே காவல்துறை அத்தகைய பகுதிகளில் இந்து ஊர்வலங்களை, பொதுக் கூட்டங்களை அனுமதிக்க மறுத்து அந்த பகுதிகளுக்கு தனி அந்தஸ்து வழங்கி வருகிறது.
இந் நிலையில் ஒட்டுெமாத்த தேசத்தின் பொருளாதாரம் குறித்து கவலைப்பட வேண்டிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 103 மாவட்டங்களில் புதிய வங்கிக் கிளைகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
இது பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி.
ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.
தேர்தலில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது குற்றம். ஆனால், உபி தேதர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அைமச்சர் சைபுதீன் சோஸ் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதாக உறுதி தந்து வாக்கு கேட்டது மதசார்பின்மையா அல்லது மத சார்பின்மையின் வக்கிரமா
பொது மக்கள் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் இல.கணேசன்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications