குன்னூரில் இந்திய-சீன எல்லை பேச்சுவார்த்தை
உதகமண்டலம்:இந்தியா மற்றும் சீன எல்லை குறித்த பேச்சுவார்த்தை இன்று இரவு குன்னூரில் தொடங்குகிறது. இது 2 நாட்கள் நடைபெறும்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இருநாடுகளுக்கு இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை குன்னூரில் இன்று இரவு தாஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி நடைபெறும்.
இந்திய சீன எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையில், வெளியுறவுதுறையின் உயரதிகாரிகளும், இந்தியாவிற்கான சீன தூதரரும் கலந்து கொள்கின்றனர்.
சீனாவின் சார்பில் சீன வெளியுறவுதுறை இணை அமைச்சர் தாய் பிங்கோ தலைமையில் 10 பேர் கொண்ட சீன குழு இந்தியா வந்துள்ளது. இவர்களுடன் சீனாவிற்கான இந்திய தூதரும் வந்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள தாஜ் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வந்த சீன அதிகாரிகள் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தனர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் குன்னூரருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுலா இடங்களுக்கு செல்லவுள்ளதால் அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன












Click it and Unblock the Notifications