ஐஐஎம் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதென ஐஐஎம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது என்ற சூழ்நிலை உருவாகியது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று ஐஐடி மற்றும் ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூறினர்.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிற 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால் அதுவரை மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என நாட்டில் உள்ள ஆறு ஐஐஎம் நிறுவனங்ளுக்கும் நேற்று மத்திய மனித வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்றே இயக்குநர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது நியாயமற்ற ஒன்று. எனவே வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதே சரியான செயல்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றார் அர்ஜூன் சிங்.
இருப்பினும் 23ம் தேதிக்குப் பிறகும் சிக்கல் நீடித்தால் தாங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டி வரும் என்று ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications