13 வயது சிறுமி கற்பழித்து கொடூர கொலை
சேலம்:சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகள் மேனகா (13). 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் தனது பாட்டில் பழனியம்மாள் வீட்டுக்குச் சென்றார்.
நேற்று மாலை பழனியம்மாள் பால் வாங்க வெளியே சென்றிருந்தார். மேனகா மட்டும் வீட்டில் இருந்தார். பால் வாங்கி விட்டுத் திரும்பிய பழனியம்மாள் வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் குழப்பமடைந்தார். அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டுக் கொண்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தார்.
அப்போது அங்கு மேனகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சமயத்தில் வீட்டுக்குள் ஒளிந்திருந்த ஒரு வாலிபர் அங்கிருந்து ஓட முயன்றார்.
அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேனகாவை அந்த வாலிபர் கற்பழித்துப் பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிடிப்பட்ட வாலிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் பெயர் மகேஷ் (27) என்றும் நெல்லையில் லாரி டிரைவாக இருக்கிறார் என்றும் தெரிய வந்தது.
மேனகா குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருந்த மகேஷ், மேனகாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால், அதற்கு அவள் குழந்தை, படிக்க வேண்டும் என மேனகாவின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.
மேனகா குடும்பத்தினர் சேலம் வந்திருப்பது தெரிந்து இங்கு வந்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
ஆனால் போலீஸார் இதைப் பற்றி தகவல் தர மறுக்கின்றனர். கொலையாளி இன்னும் கிடைக்கவில்லை, இன்று மாலைக்குள் பிடித்து விடுவோம் என்கின்றனர்.
ஆனால், அந்தப் பகுதி மக்களோ கொலையாளியை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துவிட்டோம் என்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications