ஜெவுக்கு மிரட்டல்: இலங்கை மீது புலிகள் புகார்
இலங்கை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு, மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலிகளின் ராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகின் எந்த நாட்டின் உள் விவாகரங்களிலும் தலையிடக்கூடாது என்ற கொள்கையை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து கடை பிடித்து வருகின்றனர்.
ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழ்நிலையை கட்டுப்படுத்திவிடலாம் என இலங்கை அரசு எண்ணுகிறது.
இலங்கை அரசால் இயக்கப்படும் சில சக்திகளால் தான் தமிழ்நாட்டில் சில முக்கிய தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம்.
இத்தகைய முறைகேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் எங்களது பெயரால் செய்யப்படும் இத்தகைய முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
தனிநபர்களும் மற்றும் ஊடகங்களும் இத்தகைய கடிதங்களை பொருத்தப்படுத்த வேண்டாம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறியுள்ளார் இளந்திரையன்.












Click it and Unblock the Notifications