குற்றங்கள் குறைந்து விட்டன: கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைந்து சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மதுவிலக்குத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விளக்க குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார்.
இவற்றைத் தாக்கல் செய்து கருணாநிதி பேசுகையில், இந்த வருடம் காவல் துறையினர் திறமுடன் செயல்பட்டதன் மூலமாக தமிழகத்தில் பெரிய அளவில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகவில்லை. ஜாதி மத மோதல்கள் நடப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை, தென்காசியில் நடந்த கொலை ஆகிய பிரச்சினைகள் சிறப்பாக கையாளப்பட்டு வன்முறை பரவாமல் தடுக்கப்பட்டது.
பயங்கரமான கொள்ளையர்களான கிரில் கொள்ளை கும்பலை சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இரும்பு குண்டுகள் கடத்தியதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ததன் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் காவல்துறை தனது திறமையை காட்டியுள்ளது. தமிழகத்தில் குற்றநிகழ்வுகள் குறைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு ரூ.20 கோடியே 31 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது.
காவல்துறை நவீன மயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய தொழில் நுட்பத்தின் வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவிகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
10 மாவட்டங்களில் 20 போக்குவரத்து காவல்நிலையங்களும், 10 நடமாடும் நீதிமன்றங்களும் அமைக்கப்படும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications