ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ரகசிய ஒப்பந்தம்போட்டார் ராஜீவ்-முன்னாள் காங். எம்.பி

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்:1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் செங்கற்களை வைத்து பூஜை நடத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி கொடுத்து அந்த அமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

நாக்பூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் புரோஹித் பேசுகையில்,

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்திருந்தவர்கள் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்க விட்டிருக்க மாட்டோம் என ராகுல் காந்தி கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

உண்மையில் நடந்தது என்ன என்று ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1989ம் ஆண்டு நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாஹேப் தியோராவுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் பானு பிரகாஷ் சிங்க்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்தது. அதற்கு ஏற்பாடு செய்தது நான்தான்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விருப்பத்தின் பேரிலேயே இந்த சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்தேன். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் பிடேவின் உதவியுடன் இந்த சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்தேன்.

மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பாபாசாஹேப் தலாதுலேவின் வீட்டில்தான் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உருவானது.

அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் செங்கற்களை வைத்து பூஜை நடத்திக் கொள்ள ராஜீவ் காந்தி அனுமதி அளித்தார். அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தர வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங்குக்கும், மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜு பைய்யாவுக்கும் இடையே டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார் புரோஹித்.

புரோஹித் தனது பேட்டியில் கூறியுள்ள பிடே, தலாதுலே ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் 1984-89, 1989-91 ஆகிய ஆண்டுகளில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புரோஹித்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+