ராமேஸ்வரம் கோவில் கோபுரத்தில் விரிசல்!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் தொன்மையானது, புராதனமானதாகும். இக்கோவிலின் பிரகாரம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானதாகும்.
காசிக்குப் புனிதப் பயணம் செல்பவர்கள் ராமேஸ்வரத்தில்தான் அதை முடிக்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் இந்து சமூகத்தினரிடம் உள்ளது.
ராமநாதசுவாமி கோவிலில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு ராஜகோபுரத்தை ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் 1649ம் ஆண்டு கட்டினார்.
இந்த ராஜகோபுரம் 126 அடியில் 9 நிலைகளைக் ெகாண்டதாகும். இந்தக் கோபுரத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
விரிசலை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications