தமிழக துறைமுகத்தை தாக்க லஷ்கர் திட்டம்: -உளவுப் பிரிவு எச்சரிக்கை
சென்னை:தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் பயங்கர தற்கொலை படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த சிலர் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்காமல் இருப்பதாக உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கியத் துறைமுகம் ஒன்றில் பெரிய அளவுக்கு தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு கராச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தற்கொலைப் படைப் பிரிவு தற்போது தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளது. எந்தத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரியவில்லை. ஆனால் மிக முக்கிய துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அந்தத் துறைமுகம் சென்னையாகவும் இருக்கலாம் அல்லது தூத்துக்குடியாகவும் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மாதங்களாகியும் தமிழக காவல்துறை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளதாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கபடவில்லை என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழக அரசிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனராம்.
அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநில காவல்துறை தலைமை ஆகியவற்றுக்கு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் விடுதலைப் புலிகளால் தமிழகத்திற்கோ, இந்தியாவுக்கோ, இந்திய அரசியல் தலைவர்களுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம். எனவே இந்தியத் தலைவர்களை அவர்கள் குறி வைக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு என்று உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications