தபால் துறை சேவைக்கு தனி விமானம்!!
சென்னை:இந்தியாவில் தபால் துறை சேவைக்காக தனி விமானம் வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய தபால் துறை மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. தனது சிறப்பான சேவையினால் மக்களிடம் நிலையான இடத்தை பிடித்துள்ளது. காலத்திற்கேற்ப தன் சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. விரைவு தபால் சேவை, விரைவு மணியார்டர் சேவை போன்ற சேவைகள் வர்த்தக நிறுவனங்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வர்த்தக ரீதியாக தொழில் போட்டியை சந்திக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, தனது சேவையை விரைவுப்படுத்தும் வகையில், தபால்துறைக்கு என தனி கார்கோ விமானங்களை இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒத்திக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த தனி விமான சேவை ஜூலை மாதம் முதல் தனது சேவையை தொடங்குகிறது.
முதற்கட்டமாக பகல் நேரங்களில் தனி விமானத்தில் இந்தியாவின் மற்ற இடங்களிலிருந்து சிக்கிம், மேகாலயா, மிசோரம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு இந்த சேவை அளிக்கப்படும்.
தற்போது சென்னையிலிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்கள் மூலம் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தனி விமானத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து கூடுதலான விமானங்கள் ஒத்திக்கு எடுக்கப்படும் என்றார் தயாநிதி மாறன்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications