துபாய்: ஊர் ஞாபகத்தில் வயிற்றைக் கிழித்துதற்கொலைக்கு முயன்ற இந்தியர்
துபாய்:ஊர் திரும்ப வேலை பார்த்த நிறுவனத்தினர் மறுத்ததால், மனம் உடைந்த இந்தியர் ஷார்ஜாவில் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்தியாவைச் சேர்ந்த குமார் (20-எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை) என்பவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார்.
திடீரென ஊரை விட்டுப் பிரிந்ததால் அவருக்கு ஊர் ஞாபகம் வந்து வாட்டியது. இதனால் வேலையை விட்டு விட்டு மீண்டும் தாயகம் திரும்ப முடிவு செய்த குமார், தன்னை வேலைக்குச் சேர்த்து விட்ட ஸ்பான்சரை அணுகி கூறியுள்ளார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த ஸ்பான்சர் வேலைக்கான பெர்மிட், குடியிருப்பதற்கான பெர்மிட் வாங்க நிறைய பணத்தை செலவழித்து விட்டேன். எனவே உன்னை திருப்பி அனுப்பினால் அந்தப் பணத்தை நான் எப்படி வசூலிப்பேன் என்று கூறி திருப்பி அனுப்ப மறுத்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த குமார் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குமாரைப் பார்த்த சக ஊழியர் உடனடியாக ஷார்ஜா தொழிற்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை ஊருக்குத் திருப்பி அனுப்பி விடுங்கள் என நான் ஸ்பான்சரிடம் கெஞ்சினேன். ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார் என்று கூறியுள்ளார் குமார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications