Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரி மீனவர்களை சுட்டது கடல் புலிகள்:புலிகள் பிடியில் 12 மீனவர்கள்-டிஜிபி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி ஐந்து மீனவர்களை சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போயுள்ள 12 குமரி மாவட்ட மீனவர்களும், விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தமிழக டிஜிபி முகர்ஜி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களையும் இலங்கை கடற்படைதான் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது. மேலும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களையும் காணவில்லை. அவர்களையும் இலங்கை கடற்படையே கடத்திச் சென்றிருக்க வேண்டும் என கருதப்பட்டது.

கடந்த மாதம் 4ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளக்கரையிலிருந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள், தூத்துக்குடி மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 12 பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

இந்த நிலையில், மீனவர்களை சுட்டுக் கொன்றது, கடத்திச் சென்றது விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல் புலிகள் பிரிவு என தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தமிழக டிஜிபி முகர்ஜி விளக்கிக் கூறியதாவது

கடலோரக் காவல் படையிடம் கடந்த 11ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் 6 இலங்கைத் தமிழர்கள் பிடிபட்டனர். மரியா என்ற பெயர் கொண்ட பழுதடைந்த படகுடன் அவர்கள் பிடிபட்னர்.

அவர்களுக்கு உதவி செய்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர். அவர்கள் பயன்படுத்தி 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மரியா என்ற பெயர் கொண்ட படகுதான் சம்பந்தப்பட்டிருந்தது என்பதால் பிடிபட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இதில் சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்களை அழைத்து படகை காட்டியும், அந்த இலங்கைத் தமிழர்களைக் காட்டியும் அடையாளம் கூறுமாறு கேட்கப்பட்டது.

ஆனால் அந்தப் படகு அல்ல என்றும், பிடிபட்ட இலங்கைத் தமிழர்களை தாங்கள் பார்த்ததில்லை என்றும் குமரி மீனவர்கள் கூறி விட்டனர். இதையடுத்து இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றத்திற்காக 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் மீதான சந்தேகம் போகவில்லை. இதையடுத்து வழக்கு கியூ பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போதுதான் பிடிபட்ட 6 இலங்கைத் தமிழர்களும் கடல் புலிகள் என்பது தெரிய வந்தது.

இவர்கள் நடுக் கடலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கப்பலில் இருந்து ஆயுதங்களை படகுகள் மூலம் புலிகளின் முகாமுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களைப் போல பல குழுக்கள் இதுபோல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த 10ம் தேதி மரியா என்று எழுதப்பட்ட படகில் ஆயுதங்களை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு பழுதாகி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டது.

பின்னர் ஆயுதங்களை கடலில் போட்டு விட்டு, அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்களிடம் உதவி கோரியுள்ளனர். அவர்களும் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் 4ம் தேதி கேரளாவிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களும் புலிகளின் பிடியில் இருப்பதாகவும் பிடிபட்ட 6 பேரும் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் அவர்களுக்கு அவசரமாக படகு தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 பேரையும் பிடித்து புலிகளின் முகாமுக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களது படகை பயன்படுத்தியுள்ளனர்.

இதேபோல கடந்த மாதம் 29ம் தேதி சின்னத்துறையைச் சேர்ந்த ஐந்து மீனவர்ளை சுட்டுக் கொன்றதும் கடல் புலிகள் பிரிவினர்தான். புலிகளின் ஒரு பிரிவினர் ஆயுதங்களுடன் படகில் சென்று கொண்டிருந்தபோது குமரி மீனவர்கள் அங்கு வந்துள்ளனர். படகில் என்ன இருக்கிறது என்று பார்க்க முயன்றுள்ளனர்.

தங்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சந்தேகித்த கடல் புலிகள் பிரிவினர் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே மரியா படகில்தான் தூத்துக்குடி அருகே பிடிபட்ட ஆறு இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர் என்று முகர்ஜி வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த வகையான வன்முறைச் செயலிலும் புலிகள் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேரைக் கொன்றதும், 12 பேரைக் கடத்திச் சென்றதும் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவு எனத் தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+