2011 உலகக் கோப்பை கிரிக்கெட்இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது
டெல்லி:10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.
9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.
10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன.
10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போட்டிகளும், பாகிஸ்தானில் 16, இலங்கையில் 9, வங்கதேசத்தில் 6 போட்டிகளும் நடைபெறும்.
ஒரு அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், இன்னொரு அரை இறுதிப் போட்டி லாகூரிலும் நடைபெறும். இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, நாக்பூர், சண்டிகர், அகமபாதாபாத் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கு முன்பு ஆசிய நாடுகள் இணைந்து (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) கடந்த 1987ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தியுள்ளன. அப்போது ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. தற்போது 2வது முறையாக கூடுதலாக வங்கதேசத்தையும் சேர்த்துக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த முறையாவது இந்தியா கப் வாங்குமா அல்லது கட்டையைக் கொடுக்குமா?
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications