வான் தாக்குதல் தொடரும்-புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:வான்வழி தாக்குதல்கள் தொடரும் என்று விடுதலைப் புலிகள் இலங்கையை எச்சரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் தங்களது வான்வழித் தாக்குதல்களை அடிக்கடி நடத்த ஆரம்பித்துள்ளனர். இதுவரை மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், விமானத் தாக்குதல் தொடரும் என புலிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புலிகள் அமைப்பின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இனப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வுதான் ஒரே வழி என இலங்கை ராணுவம், குறிப்பாக விமானப்படை பிடிவாதமாக உள்ளது.
![]() |
எனவேதான் எங்களுக்கு விமானத் தாக்குதலை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது. இத்தோடு நிற்க மாட்டோம். இன்னும் நிறையை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். எங்களுக்குத் திருப்பி அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது தாக்குதல் நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று என்றார் இளந்திரையன்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை சமாளிக்க மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார். இனப் போரில் இது புதிய பரிமாணமாக உருவெடுத்துள்ளது.
இதை சமாளிக்க சில நவீன ஏற்பாடுகளை இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. அவர்களின் வான் பலத்தைக் குறைப்பதே இப்போதைய முக்கிய வேலையாகும் என்றார்.
![]() |
இதற்கிடையே, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராயல் டச் ஷெல் நிறுவனம் கொழும்பு அருகே உள்ள தனது எண்ணைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது. புலிகளின் 3வது விமானத் தாக்குதலில் இந்த நிறுவனத்தின் எண்ணை கிட்டங்கி சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விநியோகம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தொடர் தாக்குதல் காரணமாக இலங்கையில் பங்குகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்துள்ளது.
இந்த நிலையில், புலிகளிடம் தற்போது சாதாரண இலகு ரக விமானங்களே உள்ளன என்றாலும் கூட அவற்றை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என ஜேன்ஸ் வீக்லி நிறுவனத்தின் ஆயுத ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், புலிகளிடம் இருப்பது மிகவும் சிறிதான விமானம்தான். ஆனால் அதற்காக அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சிறிய விமானமாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவதைக் கொண்டு அழிவை நாம் தீர்மானிக்க முடியும்.
புலிகள் மிகவும் திறமையாக அவற்றை இயக்குகிறார்கள். வந்த வேகத்தில் தாக்குதலை நடத்தி விட்டு மின்னலென போய் விடுகிறார்கள். அவர்களை இலங்கை படையினரால் சமாளிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் விமானத் தாக்குதலை இலங்கை பாதுகாப்புப் படையினரால் சமாளிக்க முடியவில்லை, அதற்கு அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பதையே கடந்த 3 தாக்குதல்களும் நிரூபித்துள்ளன என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்














Click it and Unblock the Notifications