வாழைத் தார் லாரி கவிழ்ந்து 6 பேர் பலி:  கார்-லாரி மோதலில் 5 பேர் சாவு:கார்-லாரி மோதலில் 5 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வாழைத்தார்களை ஏற்றி வந்த லாரி, திருச்சி அருகே தலைகுப்புற கவிழ்ந்ததில், 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தூத்துகுடியிலிருந்து வாழைத்தார் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அந்த லாரியில் 8 கூலித் தொழிலாளர்கள் ஏறியுள்ளனர். லாரியின் மேலே அவர்கள் அமர்ந்துள்ளனர்.

லாரி சமயபுரம் பள்ளிவிடை பாலத்தை கடந்த போது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் தலை குப்புற விழுந்தது.

இதில் லாரியின் மேலே அமர்ந்திருந்த கூலித் தொழிலாளர்கள் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீது வாழை தார்களும் விழுந்ததால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி வெளியில் வர முடியாமல் மூச்சு திணறி 4 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லாரி டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடிவிட்டனர்.

கார்-லாரி மோதலில் 5 பேர் பலி:

இதற்கிடையே திண்டுக்கல் அருகே காரும் லாரியும் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட ஐவர் பலியாயினர்.

நாமக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அந்த கார் மீது தாடிக் கொம்பு என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மோதியது.

இதில் ஜெயா (40), அவரது மகள்கள் பவித்ரா (15), ரேசலி (10) மற்றும் முருகன் (55), டிரைவர் மணி (30) ஆகியோர் பலியாயினர். மேலும் ஜெயாவின் கணவர் செல்வம் மற்றும் லீலாவதி (50) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சப் இன்ஸ்பெக்டர் ரவி ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியது குறிப்பிடதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+