விவகாரத்து கேட்கும் இளம் ஐபிஎஸ் அதிகாரி!
சென்னை:சென்னை கோட்டை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருக்கும் பாலகிருஷ்ணன், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். ஆனால் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி முதல்வர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு செய்துள்ளார்.
கோட்டை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக இருப்பவர் பாலகிருஷ்ணன். 30 வயதே ஆகும் பாலகிருஷ்ணன் மிகவும் நேர்மையானவர், திறமையானவர் என காவல்துறையில் பெயரெடுத்தவர்.
இவருக்கு செலின் ரோஸ் (26) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணனின் தந்தையும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
2 ஆண்டுளுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி முடித்த பாலகிருஷ்ணன் முதலில் திருப்பூரில் உதவிக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை கோட்ைட துணை ஆணையராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாலகிருஷ்ணன்.
இதற்கிடையே அவரது மனைவி செலின், முதல்வர் அலுவலகத்திற்கும், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் தனித் தனியாக மனுக்கள் அனுப்பி, தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து பாலகிருஷ்ணனை அழைத்து முதல்வர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது விரிவான விளக்கத்தை அளித்துள்ளார் பாலகிருஷ்ணன்.
முதல்வர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள விளக்கக் கடிதத்தில், நான் முதலில் வங்கியில் பணியாற்றினேன். பின்னர் மத்திய அரசின் செய்திப் பிரிவில் பணியாற்றினேனன். எனது மனைவி கிறிஸ்தவர். எனக்கும், எனது மனைவிக்கும் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம்தான் சொந்த ஊர்.
பெற்றோர் பார்த்து எங்களது திருமணத்தை திருவனந்தபுரத்தில் நடத்தி வைத்தனர். கல்யாணம் நடந்தபோது நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இல்லை. இதனால் என்னை எனது மனைவியும், அவரது குடும்பத்தினரும் உதாசீனமாக நடத்தினர். என்னை அவர்கள் மதிக்கவே இல்லை.
இருந்தாலும் அதை சகித்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் பொறுமையுடன் குடும்பம் நடத்தினேனன். அதன் விளைவாக எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
நானாக எனது மனைவியைப் பிரிந்து செல்லவில்லை. அவராகத்தான் சென்றார். உதாசீனப்படுத்திய எனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை.
எனது மகளை நானே வளர்க்க தயாராக உள்ளேன். அவளுக்குச் செய்ய வேண்டியவற்றை செய்யவும் தயாராக உள்ளேன். மனைவியுடன் மீண்டும் குடும்பம் நடத்தத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணன்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications