பெண் கலெக்டர் திருமண வரவேற்புக்காகஊட்டியிலிருந்து பறந்து வந்த ஜெ.
சென்னை:சென்னையில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் கோவைக்குச் சென்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு வார கால ஓய்வுக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தார். உடன் சசிகலாவும் சென்றிருந்தார்.
![]() |
இந்த நிலையில் நேற்று மாலை அவசரமாக கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. கூடவே சசிகலாவும் வந்தார்.
இருவரும் நேராக வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
அது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகும்.
குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவர் சுவர்ணா. தஞ்சையைச் சேர்ந்த சீனிவாசன்-சுலோச்சனா தம்பதியினரின் மகள் ஆவார். டாக்டர் பட்டம் பெற்ற சுவர்ணா, 1997ம ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
நெல்லையில் முதலில் துணை ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து தற்போது குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
இவருக்கும் ரகுநந்தனுக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜெயலலிதா அவசரம் அவசரமாக தனி விமானம் பிடித்து வந்துள்ளார்.
மணமக்களை வாழ்த்திய பின்னர் அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா, தான் வந்த அதே விமானத்தில் மீண்டும் கோவை திரும்பினார்.
ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரராக ஜெயலலிதாவால் குறிப்பிடப்படும் வைகுண்டசாமியைக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திமுக அரசு துடிக்கிறது. அவரது தொழிலை நசுக்க துடிக்கிறது என்று சமீபத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
வைகுண்டசாமி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணா ஒத்துக் கொள்ளாததால், அவரை நீண்ட விடுப்பில் செல்லுமாறு அரசு உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்புக்கு ஜெயலலிதா தனி விமானத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்













Click it and Unblock the Notifications