உல்மரை கடைசியாக சந்தித்த இருவர்பத்திரிக்கையாளர்கள்- பாக் டிவி கூறுகிறது
டெல்லி:பாப் உல்மர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக அவரை சந்தித்த இருவரும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள், அவர்கள் கொலையாளிகள் அல்ல என்று பாகிஸ்தானின் ஜியோ டிவி நிறுவனம் கூறியுள்ளது.
ஜமைக்காவில் கொல்லப்பட்ட பாப் உல்மர் கொலை குறித்து இன்னும் குழப்பமான நிலையே உள்ளது. கடைசியாக அவரைச் சந்தித்த இருவர் குறித்த வீடியோ படம் சமீபத்தில் வெளியானது. பிபிசி டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் படத்தில் பாப் உல்மர் தனது அறைக்குச் செல்ல முயலுகிறார்.
அப்போது அவருடன் இருவர் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் வெள்ளைச் சட்டை, கருப்புப் பேண்ட் அணிந்துள்ளார். இன்னொருவர் கருப்பு உடை அணிந்துள்ளார்.
![]() |
உல்மர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக இவர்களுடன்தான் உல்மர் பேசியதாக கூறப்படுகிறது. எனவே இந்த வீடியோ படம் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜமைக்கா போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் என பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ டிவி கூறியுள்ளது.
அவர்களில் ஒருவர் ஜியோ டிவியைச் சேர்ந்த மஜீத் பட்டி என்றும், இன்னொருவர் அசோசியேட் பிரஸ் ஆப் பாகிஸ்தானைச் (ஏபிபி) சேர்ந்த இஷான் குரேஷி எனவும் ஜியோ டிவி கூறியுள்ளது.
இதுகுறித்து சர்ச்சையில் சிக்கியுள்ள மஜீத் பட்டி கூறுகையில், நானும் ஏபிபி நிருபரும், பெர்வேஸ் மீர் அளித்த விருந்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். விருந்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அந்த விருந்தில் பாப் உல்மரும் கலந்து கொண்டார்.
அவர் தனது அறைக்குள் சென்றபோது நாங்கள் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் காட்சிதான் அது. இதில் வேறு விசேஷம் எதுவும் இல்லை.
அயர்லாந்துடனான போட்டிக்கு முன்பாக, அதாவது மார்ச் 16ம் தேதியன்று அந்தப் படம் பதிவாகியுள்ளது.
உல்மர் பாகிஸ்தான் அணி மீது கவனம் செலுத்தாமல், ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குக் கட்டுரைகள் எழுதுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவதாக அப்போது சர்ச்சை எழுந்தது. அதுகுறித்து கேட்கத்தான் அப்போது பேசிக் கொண்டிருந்தோம் என்றார் பட்டி.
இதற்கிடையே, உல்மருக்கு முதலில் விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் சுய நினைவிழந்த நிலையில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளது உறுதியாகியுள்ளதாக பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
உல்மர் கொலை வழக்கை 30 அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை 100 சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்













Click it and Unblock the Notifications