பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார்கள்ளழகர்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை:
பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு வணங்கி அழகர் அருள் பெற்றனர்.
![]() |
தங்கை மீனாட்சியின் கல்யாணத்தைக் காண அழகர் மலையிலிருந்து கிளம்பி வருவார் அழகர் பெருமான். ஆனால் அவர் வருவதற்குள் மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் அழகர் மதுரை நகருக்குள் வராமலேயே வைகை ஆற்றோடு திரும்பி விடுகிறார்.
சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து நடத்தப்படும் இந்தப் புராதண சித்திரைத் திருவிழாவின் உச்சகட்டமான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.
மதுரைக்கு கள்ளழகர் வேடம் பூண்டு அழகர் மலையிலிருந்து கிளம்பி வந்த அழகருக்கு நேற்று மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வரவேற்று மதுரைக்குள் அழைத்துச் சென்றனர்.
இன்று காலை 6 மணிக்கு வைகை ஆற்றில் அழகர் இறங்கினார். அவரை வீரராகவ பெருமாள் வரவேற்று அழைத்துச் சென்றார். பச்சைப் பட்டில், தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கியபோது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், அரோகரா கோஷம் போட்டும் வணங்கி அழகர் பெருமானின் அருளைப் பெற்றனர்.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண இன்று அதிகாலையே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மதுரையே குலுங்கிப் ேபானது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு திரண்டிருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் அழகரை தரிசிக்க காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கார் குண்டு மிரட்டல் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications